ஒன்றாரியோவில் மருத்துவ நிபுணர்களுக்காக காத்திருக்கும் மக்கள்
ஒன்ராறியோ மாகாணத்தில் மருத்துவ நிபுணர்களை சந்திக்க காத்திருக்கும் நேரம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த புதிய தரவுகளை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு மருத்துவ நிபுணரிடம் முதல் மதிப்பீட்டிற்காக சென்ற ஒன்ராறியோ மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர், முதல் சந்திப்பிற்காக காத்திருந்த நேரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10.8 மில்லியன் கனடியர்கள் கடந்த ஆண்டு மருத்துவ நிபுணரிடம் முதல் ஆலோசனைக்காக சென்றதாக தெரிவித்தனர்.
இதில், 35 சதவீதம் பேர் ஒரு மாதத்திற்கும் குறைவாக காத்திருந்ததாகவும், 40 சதவீதம் பேர் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு குறைவாகவும், 36 சதவீதம் பேர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் காத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் 42 சதவீதம் பேர் ஒரு மாதத்திற்குள் மருத்துவ நிபுணரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒன்ராறியோவில் இது 33 சதவீதமாக காணப்பட்டது.
மொத்தத்தில், கனடியர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் (சுமார் 45.6 சதவீதம்) காத்திருப்பு நேரத்தை "திருப்திகரமாக" அல்லது "மிகவும் திருப்திகரமாக" கருதியதாகவும், 34.2 சதவீதம் பேர் அதிருப்தி அல்லது மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
ஒன்ராறியோவில் இந்த திருப்தி அளவு தேசிய சராசரியை விட சற்று குறைவாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.