மது போதையில் விபத்தை ஏற்படுத்தினால்... ஒன்ராறியோவில் புதிய சட்ட நடவடிக்கை
கனடா ஒன்ராறியோவில், மதுபோதையில் வாகன விபத்தை ஏற்படுத்தி, ஒரு குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தினால், குற்றம் சாட்டப்பட்ட சாரதி அக்குழந்தைக்குத் தொடர்ச்சியாக ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் புதிய சட்ட நடவடிக்கையை உருவாக்கிவருவதாக ஒன்ராறியோ மாநில அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஒன்ராறியோ மாநில அரச அதிகாரிகள் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

18 வயது ஆகும் வரை ஜீவனாம்சம்
2023ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தில் அறிமுகமான இதே போன்ற சட்டத்தை ஒன்ராறியோவும் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அங்கு, "போதையில் மரணம் ஏற்படுத்தியதாக" குற்றம் சாட்டப்படும் சாரதிகள், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை அல்லது உயர்நிலை கல்வியை முடிக்கும் வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ஒன்ராறியோ அதிகாரிகள், இதே மாதிரியான விதிமுறைகள் மற்றும் பிற நாடுகளிலுள்ள உதாரணங்களை ஆய்வு செய்து, மாநிலத்தில் அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்துள்ளனர்.