அவுஸ்திரேலியாவில் புதிய அரசியல் சர்ச்சை; சிக்கலில் ஸ்கொட்மொறிசன்
முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் (Scott Morrison) இரகசியமாக மூன்று அமைச்சு பதவிகளைவகித்தார் என்ற என்ற விபரம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.
சுகாதாரம் நிதி மற்றும் வளங்கள் அமைச்சின் இணைந்த அமைச்சராக ஸ்கொட்மொறிசன் (Scott Morrison)பதவி வகித்தார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இது ஏற்றுக்கொள்ள முடியாத விசித்திரமான விடயம் என தெரிவித்துள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) இது குறித்து சட்ட ஆலோசனையை பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் முன்னாள் பிரதமர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கான பிரிட்டிஸ் மகாராணியின் பிரதிநிதி கவர்னர் ஜெனரல் டேவிட் ஹேர்லி (David Hurley) தான் ஸ்கொட்மொறிசன் இரகசியமாக அமைச்சரவை பதவிகளை ஏற்பதற்கு அனுமதியளித்த ஆவணத்தில் கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ளார்.
அது அரசமைப்பின் 64 பிரிவின் அடிப்படையிலான நடவடிக்கை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கையை அல்பெனிசும் (Anthony Albanese) சட்டநிபுணர்களும் ஸ்கொட்மொறிசனின் (Scott Morrison) சகாக்களும் கண்டித்துள்ளனர்.
அதோடு தாங்கள் தங்களுடைய அமைச்சு பொறுப்புகளை பிரதமருடன் பகிர்ந்துகொள்ளும் விடயம் சில அமைச்சர்களிற்கு கூட அவ்வேளை தெரிந்திருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் கொவிட்டினால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதை கருத்தில் கொண்டு அப்போதைய சுகாதார அமைச்சர் கிரெய்க் ஹன்ட் (Greg Hunt) 2020 இல் அமைச்சினை பகிர்ந்துகொள்ள இணங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அவ்வேளை நிதியமைச்சராக பதவி வகித்த மத்தியாஸ் கோர்மனிற்கு (Mathias Cormann) இந்த விவகாரம் கடந்த வாரமே தெரியவந்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.