அமெரிக்க கர்தினால் பாப்பாண்டவராக தெரிவு
உலக வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கர் ஒருவர் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரிசொவ்ட் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால்களினால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் புதிய பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புனித பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு எதிரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் குழுமியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பாண்டவராக தெரிவானதன் பின்னர் முதல் தடவையாக பாப்பாண்டவர் ரொபர்ட் வத்திக்கான் பீட்டர்ஸ் தேவாலய பல்கனியில் தோன்றியுள்ளார்.
நேற்றைய தினமும் இன்றைய தினமும் நடைபெற்ற நான்கு சுற்று வாக்கெடுப்புக்களின் பின்னர் பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டிலும் இவ்வாறு நான்காம் தடவை வாக்கெடுப்பின் மூலம் பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.