முஹம்மது யூனுஸுக்கு ஆதரவாக டாக்காவில் புதிய போராட்டம்
பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், அவரது ஆதரவாளர்கள் சனிக்கிழமை (24) டாக்காவில் எதிர்ப்புப் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
டாக்காவின் ஷாபாக்கில் ‘யூனுஸுக்கான அணிவகுப்பு’ என்ற பெயரில் யூனுஸ் ஆதரவாளர்கள் ஒரு எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் தலைநகரில் மக்கள் பேரணியில் சேர அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் இராணுவத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து யூனுஸ் இராஜினாமா செய்வதாக மிரட்டியதாக செய்திகள் வந்ததைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்துள்ளன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரத்தியேக உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் புதன்கிழமை தெரிவித்தார்.
தேர்தல்கள் எப்போது நடத்தப்பட்டாலும், அது வங்காளதேசத்தின் நடைமுறைப் பிரதமராக இருந்த யூனுஸின் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
இராணுவம் மற்றும் போராட்டக்காரர்களின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு அவர் நடைமுறைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.