நியூசிலாந்தில் புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது, அந்த அறிக்கையில்,
உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை
புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் லெவல் 8, எண். 38, பெதெரிக் டவர், வாரிங் டெய்லர் தெரு, வெலிங்டன் சென்ட்ரல் எனும் முகவரியில் அமைந்துள்ளது.
பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை பொதுமக்களுக்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் வழங்கப்படும்.
கடவுச்சீட்டு வழங்கல், பிறப்பு பதிவுகள், இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள், ஓய்வூதியம் தொடர்பான விடயங்கள், அதிகார பத்திரம் மற்றும் சத்தியக்கடதாசி ஆகிய சேவைகள் வழங்கப்படும்.
நேரம் ஒதுக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும், அனுமதி பெற்று மூன்று வேலை நாட்களுக்குள் உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கில் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மேலதிக விசாரணைகளுக்கு, வெலிங்டனில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தை slhc.wellington@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 021 081 43 469 என்ற தொலைபேசி இலக்கத்திலோ காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.