மனித உடல்களை உரமாக்கும் நியூயார்க்!
அமெரிக்க மாகாணங்களின் மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது அடக்கம் செய்வது ஆகியவற்றுக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த முறையில் மனித சடலம் ஒரு கண்டெய்னரில் அடைக்கப்ட்டு பல வாரங்கள் கழித்து அந்த உடல் மக்கிப்போகும்.
அதேவேளை கடந்த 2019ம் ஆண்டு இந்த முறையை முதல்முதலாக சட்டப்பூர்வமாக்கிய அமெரிக்க மாநிலமாக வாஷிங்டன் உள்ளது.
அதை தொடர்ந்து, கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த பட்டியலில் 6வது அமெரிக்க மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
மனித உடலை உரமாக்கும் நடவடிக்கை சிறப்பு முறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறதாக கூறப்படுகின்றது.