நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த எல்லைகளை திறந்த நாடு!
கோவில் 19 பெரும் தொற்று காரணமாக மிக நீண்ட காலமாக தனது எல்லைகளை மூடி இருந்த நியூசிலாந்து அரசாங்கம் தற்போது எல்லைகளை திறந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவில் பெரும் தொற்று காரணமாக நியூசிலாந்து அரசாங்கம் எல்லைகளை மூடி இருந்தது.
நோய் தொற்று பரவுகிறது கட்டுப்படுத்தும் நோக்கில் நீண்ட காலமாக நியூசிலாந்திற்குள் பிரவேசிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரையறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும் நீண்ட இடைவெளியின் பின்னர் இன்றைய தினம் முதல் நியூசிலாந்து முழு அளவில் தனது எல்லைகளை திறந்துள்ளது.
நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளிநபர்களும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் கோவிட் பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா கப்பல்கள் படகுகள் என்பனவற்றில் நாட்டுக்குள் பிரவேசிப்பூருக்கும் அனுமதி வழங்கப்படும் என நியூசிலாந்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்டோர்ட் டேஷ் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று தீவிரமாக காணப்பட்ட காலப் பகுதியில் நியூசிலாந்து சிறந்த முறையில் அதனை கட்டுப்படுத்தியதாக உலகம் முழுவதிலும் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் போன்றவர்களினால் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை நீண்ட காலம் காணப்பட்டது.