கனடாவில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்
கனடாவின் நியூபவுன்ட்லாண்டைச் சேர்ந்த மீனவர்கள் தங்களத வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பியோனா புயல் காற்று தாக்கம் காரணமாக இவ்வாறு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புயல் காற்று காரணமாக மீன்பிடி துறைகள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ளதாக சில மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புயல் காற்று காரணமாக மீனவர்கள் ஏதோ ஓர் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும், அதனை ஈடு செய்ய நீண்ட காலம் செல்லும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூபவுன்ட்லாண்டில் சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாக மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.