வெளிநாடொன்றில் வெடித்து சிதறிய எரிபொருள் பவுசர்... 77 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
நைஜீரியா நாட்டில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் இருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் நேற்றையதினம் (19-01-2025) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜாவில் பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிவு ஏற்பட்டது. மக்கள் எரிபொருளை சேரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அது வெடித்தது.
இதன்போது எரிபொருள் சேகரிக்க சென்ற மக்கள் உயிரிழந்தனர் மற்றும் மீட்பு பணியாளர்கள் உட்பட 25 பேர் காயமடைந்ததாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் சமீப மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.