பாடசாலை கண்காட்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம்... உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கண்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் உயிரிழந்தாகவும், மேலும் 6 பேர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நைஜீரியாவின் தென்மேற்கு நகரமான இபாடானில் பாடசாலையில் நேற்று முன்தினம் (18-12-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த பாடசாலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி அந்த பாடசாலையில் நேற்று முன்தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை காணவும், பரிசு பொருட்களை வாங்கவும் பாடசாலையில் கூட்டம் குவிந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்தாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஓயோ மாநில பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அடேவாலே ஒசிபெசோ தெரிவித்துள்ளார்.