கனடாவில் பொதுப் போக்குவரத்து பணிப்புறக்கணிப்பு குறித்து எச்சரிக்கை
கனடாவில் பொதுப் போக்குவரத்து சேவை பணிப் புறக்கணிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GO பஸ் சேவைகள் நாளைய தினம் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோ பொதுப் போக்குவரத்து சேவையின் ஆயிரக் கணக்கான பணியாளர்கள் நாளை தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணியாளர்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பஸ்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் எனவும் இறுதி முயற்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க நேரிடும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாளைய தினம் இவ்வாறு பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தால் அதனால் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.