ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட வடகொரியா
அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின்(Kim Jong Un) மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.
வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்திகதி சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இந்த ஏவுகணை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் (Kim Jong Un) மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
BREAKING: North Korea's state-run television shows edited footage of Kim Jong Un guiding the test-launch of what the country referred to as the Hwasong-17 ICBM.
— NK NEWS (@nknewsorg) March 25, 2022
Latest story: https://t.co/belL7EdPUl
(Video: KCTV) pic.twitter.com/APifRhtJVr
வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட் பட பாணியில் வீடியோவாக வடகொரியா ராணுவம் வெளியிட்டுள்ளது.
வீடியோவில் கிம் ஜாங் அன்(Kim Jong Un) கருப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கண்ணாடியை அணிந்து நடந்துவர, அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்படுகிறது.
பின்னர் கிம் ஜாங் அன்(Kim Jong Un) தனது கைக்கடிகாரத்தை பார்த்து, கவுண்டன் சொல்கிறார். அதை தொடர்ந்து ஏவுகணை நெருப்பை கக்கியப்படி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.
இந்நிலையில் ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் அன்(Kim Jong Un) ராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவதுபோல் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.