அதிர்ச்சியை ஏற்படுத்திய வட கொரியாவின் அறிவிப்பு !
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களது அணு ஆயுதங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு கூறியுள்ளார்.
வடகொரியாவின் தலைமைக்கு எதிரி நாடுகளால் ஆபத்து ஏற்படும்போது, அந்த நாடுகள் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி தன்னிச்சையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில், கிம் ஜோங் (Kim Jong Un) இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வட கொரியாவின் அணு ஆயுத அந்தஸ்து வலுப்பெற்றுவிட்டதாகவும் கிம் ஜோங் உன் (Kim Jong Un) கூறியதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.