கோடீஸ்வரர் எலான் மஸ்குக்கும் கனடாவுக்கும் என்ன தொடர்பு?
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் திடீரென கனடா வந்திறங்கிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
எலான் மஸ்க், தென்னாப்பிரிக்காவிலுள்ள Pretoria என்னுமிடத்தில் பிறந்தவர் ஆவார். ஆனால், அவரது தாயான Maye Musk, கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் பிறந்தவர் ஆவார்.
ஆக, தனது தாய் மூலமாக கனேடிய குடியுரிமை பெற்றவர் எலான் மஸ்க்.
பதின்மவயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்த எலான் மஸ்க், தனது வாழ்வின் ஆரம்ப காலத்தின் பெரும்பகுதியை சஸ்காட்செவனிலும் வான்கூவரிலும் செலவிட்டார். அத்துடன், அவர் ஒன்ராறியோவிலுள்ள குயின்ஸ் பல்கலையில் கல்வியும் கற்றார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று எலான் மஸ்க் தனது சொந்த விமானம் ஒன்றில் திடீரென பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பெல்லா பெல்லா என்னும் சிறிய நகரத்துக்கு வருகை புரிந்தார்.
எலான் மஸ்கின் கனடா வருகை கவனம் ஈர்த்துள்ள நிலையில், அவர் எதற்காக திடீரென கனடா வந்தார் என்பது குறித்து மக்கள் தங்கள் யூகங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதாவது, பெல்லா கூலா என்னுமிடத்தில், ஊடக ஜாம்பவானான ரூபர்ட் முர்டோக்கின் மகனான ஜேம்ஸ் முர்டோக்குக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது.
அவர், டெஸ்லா போர்டின் உறுப்பினரும் ஆவார். ஆக, எலான் மஸ்க் அங்கு சென்றிருக்கக்கூடும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, 2025ஆம் ஆண்டில் நிலவரப்படி 413 பில்லியன் டொலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இலங்கை மதிப்பில் அது 12,46,23,57,60,00,000.00 ரூபாய் ஆகும்.