எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் மிரட்டும் வடகொரியா
அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர், வடகொரியாவுக்கு எதிராக கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இப் பயிற்சி நாளை (16) முதல் சுமார் 15 நாட்களுக்கு நடக்கவுள்ளது.

இப் போர் பயிற்சியில் மூன்று நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு இராணுவ நடவடிக்ககைளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப கடலில் நடக்கவுள்ள இந்த பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான கிம் யோ ஜாங் இது தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த இராணுவப் பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களின் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என கூறியுள்ளார்.