உக்ரைனுக்கு எதிரான போரில் உயிரிழக்கும் வடகொரிய வீரர்கள்... எல்லாம் இதனால்தான்!
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது, 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடத்து வருகின்றது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயற்பட்ட 300 வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,700 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தென்கொரிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியாங்-வீஅன் தேசிய புலனாய்வு துறையின் (என்.ஐ.எஸ்.) அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது வடகொரிய வீரர்களின் மரணம் பற்றிய இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது,
ரஷ்யாவுக்கு ஆதரவாக குவிக்கப்பட்ட வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
தேசிய புலனாய்வு துறையின் ஆய்வின்படி, நவீன போர் கருவிகளை பற்றிய புரிதல் வடகொரிய வீரர்களுக்கு இல்லை. போதிய அளவுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத அவர்களை ரஷியா பயன்படுத்தி கொள்கிறது.
அந்த வகையில், வீரர்கள் இடையே அதிக அளவில் காயங்களும், மரணங்களும் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.