அமெரிக்க கத்தோலிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; 3 பேர் பலி
அமெரிக்காவின் மினியாபோலிஸ் பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலையொன்றில் நடந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 7 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்ட துப்பாக்கிதாரியின் உடலத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் 8 மற்றும் 10 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
முன்னபள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கத்தோலிக்க ஆராதனையின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நிலைமைகள் குறித்து தமக்கு முழுமையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளை மாளிகை நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.