கனடாவில் வீடு ஒன்றிற்குள் வந்த அழையா விருந்தாளி! அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்
கனடாவின், வான்கூவாரில் திறந்திருந்த வீடு ஒன்றிற்குள் கரடியொன்று நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த கரடி, குளிர்சாதனப் பெட்டியை திறந்து உணவுப் பொருட்களை எடுத்து உட்கொண்டுள்ளது.
தனது வீட்டிற்குள் புகுந்து உணவுப் பொருட்களை காலி செய்யும் கரடியை பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
முதலில் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் பின்னர் தன்னை சுதகாரித்துக் கொண்டு கரடியின் செயற்பாட்டை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்த உணவு
திறந்திருந்த வீட்டிற்குள் எவ்வித சிக்கலும் இன்றி நுழைந்த கரடி, குளிர்சாதனப் பெட்டியிலிருந்த உணவுகளை உட்கொண்டதாகவும் வீட்டின் வேறு எந்த பகுதிக்கும் சேதங்கள் ஏற்படுத்தவில்லை கரடிகளை பாதுகாக்கும் அமைப்பின் பேச்சாளர் கிறிஸ்டின் மில்லர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கரடியை பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள ஏனைய வீடுகளுக்குள்ளும் பிரவேசிக்க இந்த கரடி முயற்சித்துள்ளது.
உணவுக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் காரணமாக இவ்வாறு கரடிகள் மக்கள் குடியுருப்புக்களுக்குள் பிரவேசிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.