ஏரியில் விழுந்து பேருந்து விபத்து ; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
நோர்வேலியில் கடும் பனிப்புழிவு உள்ள நிலையில் பயணிகள் பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்து விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.
அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, விபத்துக்குள்ளானபேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.