அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் கனடிய அமைச்சர்கள்
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டாமினோக் லாபிளாங்க் ஆகியோர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்திற்கு இவர்கள் இருவரும் விஜயம் செய்ய உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குழுவினரை சந்திப்பதற்காக அவர்கள் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த முக்கிய அமைச்சர்கள் அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப்படும் என அண்மையில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் கனடியர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு இருந்தனர்.
வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.