உலகளவில் 2023ல் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி எண்ணிக்கை வெளியானது!
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு, 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலேயே இவ்வாறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகளவில் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள் ஆவர். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி மூன்றாம் இடத்தில் உள்ளது.
11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் நான்காம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க - அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.
இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.