கனடாவில் புதிதாக உருவாகும் இணையதள மோசடிகள்
இணையத்தில் புதியதாக உருவாகும் மோசடிகள், நபர்களின் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை களவாடும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி காரணமாக, ஓன்டாரியோவில் ஓக் வில்லே (Oakville) பகுதியில் வசிக்கும் 82 வயது வால்டர் யாம்கா (Walter Yamka), தன் வாழ்நாள் சேமிப்பில் பெரும்பகுதியை இழந்தார்.
வாழ் நாள் சேமிப்பினை முதலீடு செய்திருந்த நிலையில், அந்த முதலீடு முதிர்வு காலத்தை எட்டியதைத் தொடர்ந்து அவர் அதிக வட்டி வீதம் கிடைக்கக் கூடிய முதலீடுகளை இணையத்தில் தேடியுள்ளார்.
இதன் போது இணைய விளம்பரமொன்றில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முதலீடு செய்து பெருந்தொகை பணத்தை இழக்க நேரிட்டுள்ளது.
முதலீடுகளுக்கு சுமார் 6.5 வீத வட்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்டதாகவும் பின்னர் எவ்வித வட்டியோ முதலோ கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் ஓர் போலி நிறுவனம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் யாம்கா தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் முதலீடுகளை செய்யும் போது மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.