தென் கிழக்கு ஆசியாவை குறிவைக்கும் சிங்கப்பூரின் “வர்த்தகப் புலி”
சிங்கப்பூரின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் வீ சோ யா (wee cho yaw). சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி (UOB) மற்றும் யுனைடெட் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (UIC) ஆகியவற்றின் தலைவர் இவர் தான்.
இந்நிலையில், வீ சோ யாவின் யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Citi வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள Citigroup இன் consumer banking businessகளின் விஸ்தரிப்பை மேற்கொள்ள UOB ஒப்புக் கொண்டுள்ளது.
அதாவது Citi வங்கி தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனது விரிவாக்கத்தை துரிதப்படுத்துவதால் இந்த வணிக ஒப்பந்தம் நடைபெற்றது. UOB வங்கி அதற்கு தற்போது கைக்கொடுத்துள்ளது.