பட்டப்பகலில் இளம் பொலிஸ் அதிகாரி கொலை... சிக்கிய பெண் உட்பட இருவர்
கனடாவில் பணியில் இருந்த இளம் பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Saskatchewan பிராந்தியத்தின் தென் பகுதியில் பட்டப்பகலில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை பகல் 8 மணியளவில் இளம் பொலிஸ் அதிகாரியான Shelby Patton(26) கடமையில் இருந்துள்ளார்.
வால்ஸ்லி நகரில் போக்குவரத்து தொடர்பான பணியில் அப்போது ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வேகமாக வந்த லொறி மோதி Shelby Patton தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி சம்பவயிடத்தில் இருந்து அந்த லொறியில் வந்தவர்கள் தப்பினர். தகவல் அறிந்த பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் பகல் 10 மணியளவில் அந்த லொறியும் அதில் பயணம் செய்த பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த லொறி திருடப்பட்டது என தெரிய வந்துள்ளது. இதனிடையே வழிபோக்கர் ஒருவர், குற்றுயிராக கிடந்த Shelby Patton-கு முதலுதவி அளிக்க முயன்றுள்ளார்.
ஆனால் சம்பவயிடத்திலேயே Shelby Patton மரணம்டைந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் Saskatchewan பிராந்திய காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக RCMP-ல் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார் Shelby Patton. இவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் காவல்துறையில் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது.