கனடிய விமான நிலையத்தில் தட்டம்மை தொற்று குறித்து எச்சரிக்கை
கனடிய விமான நிலையத்தில் தட்டம்மை நோய் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலான காலப் பகுதியில் இரண்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டால் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு குறித்த விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விமான முனைய வலயத்தில் சஞ்சரித்த அனைவரும் நோய் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
கனடாவில் இந்த ஆண்டில் தட்டம்மை நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.