100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடிய முதியவர்!
தன்னுடைய 100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் முதியவர் ஒருவர் கொண்டாடி அசத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் - ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான குமரகுரு தன்னுடைய 100வது பிறந்தநாளை 5 தலைமுறை வாரிசுகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் விழாவில் அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 45 பேரன் மற்றும் பேத்திகள், 40 கொள்ளு பேரன் மற்றும் பேத்திகள் என கிட்டத்தட்ட 5 தலைமுறைகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
தாத்தா பற்றி வாரிசுகள் கூறியது,
எந்தவொரு உடல்நல குறைவும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் தங்களுடைய தாத்தா இருப்பதற்கு அவருடைய எளிமையான வாழ்க்கை முறையும் கடின உழைப்பும் தான் காரணம் என்று அவரது வாரிசுகள் பெருமையுடன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.