வீட்டிற்கு முதன் முதலாக வந்த தண்ணீரை வணங்கிய மூதாட்டி
இந்தியாவில் பல பகுதிகளில் சரியான தண்ணீர் வசதிகூட இல்லாமல் மக்கள் பல கி.மீ நடந்தே சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலையும் இன்றளவும் இருக்கிறது. இந்நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தன் வீட்டிற்கு முதன் முறையாக வந்த தண்ணீர் குழாயில் வந்த தண்ணீரை வணங்கி இறைவனுக்கு நன்றி சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் தனது தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “அசாமில் உள்ள இந்த சகோதரி தன் வீட்டிற்கு முதன் முதலாக வந்த தண்ணீர் குழாய் தண்ணீரை வணங்கி இறைவனிற்கு நன்றி சொல்கிறார்.
இதன் மூலம் பிரதமர் மோடி அறிவித்த ஜல் ஜீவன் திட்டம் எவ்வளவு முக்கியமானது என அறிய முடிகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். இதே வீடியோவை இன்ஸ்டாகிராமில் பிஜேபி4இந்தியா என்ற பக்கமும் பகிர்ந்திருந்தது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளம் முழுவதும் பரவி, வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.