ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 4 பேருக்கு 'Omicron' பாதிப்பு கண்டுபிடிப்பு
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற 4 ஐரோப்பிய நாட்டினருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பெல்ஜியம், இஸ்ரேல், ஹொங்ஹொங் நாடுகளுக்கு தீவிரமாக பரவி வருகின்றது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு சில நாடுகளில் குறைவாக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் உச்சம் அடைந்து வருகின்றது.
இதைபின்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது அங்கு வசிக்கும் மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மதுராவிற்கு சென்ற ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் லித்துவேனியா நாட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு முதலில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேர் மற்றும் 41 வயதுடைய ஆஸ்திரியா பெண் மொத்தம் 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.