டெல்டா தொற்றை விட மோசமானது அல்ல: omicron மாறுபாடு குறித்து முக்கிய மருத்துவர்
அமெரி்க்காவில் ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவினாலும், டெல்டா தொற்றைவிட தீவிரம் குறைந்ததாகவே காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா மாறுபாடான ஓமிக்ரான். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள் ஆபிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அமெரி்க்காவில் இதுவரை 15 மாகாணங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான டெஸ்டா மாறுபாடை விட ஓமிக்ரான் தொற்றால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது என்று அமெரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவி்க்கிறார்கள்.
இந்த நிலையில், அமெரி்க்க ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஓமிக்ரான் மாறுபாடு குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன.
ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா மாறுபாடின் தீவிரத்தைவிட, ஓமிக்ரான் மாறுபாடு தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆபிரிக்க மக்கள் அமெரி்க்காவுக்குள் நுழைய தடை இருப்பது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தமடைந்ததை அறிந்தோம்.
விரைவில் இந்த தடைகள் நீக்கப்படும் என நம்புகிறேன். தென் ஆபிரிக்கா மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உண்மையில் கடினமான சூழலைத்தான் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனாவில் பாதிக்கப்படுவோரில் 99 சதவீதம் பேர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.