ஒன்ராறியோ ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்!
ஒன்ராறியோவில் tow truck தொழில் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று, ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) மூத்த அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்றம் சாட்டியதுடன், மேலும் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் அறிவித்தது. கிரேட்டர் டொராண்டோ பகுதிக்குள் உள்ள tow truck நிறுவனங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் முன்னுரிமை அளித்ததாக குற்றம் சாட்டுகிறது.
கனடா குற்றவியல் கோட்-க்கு முரணான நம்பிக்கை மற்றும் இரகசிய கமிஷன்களை பெற உதவியதாக 52 வயதான Sutheshkumar Sithambarpillay என்ற நபர் மீது காவல்துறையினர் குற்றஞ்சாட்டியதாகவும் அவர்கள் அறிவித்தனர். ஸ்டீவ் பிள்ளை என்ற பெயரில், Sutheshkumar Sithambarpillay, Steve's Towing நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார்.
இந்த நிறுவனம் வடக்கு யார்க்கில் ஷெப்பர்ட் அவென்யூவுக்கு வடக்கே நெடுஞ்சாலை 400 க்கு அருகில் அமைந்துள்ளது.
டிஸ்கவரி கனடாவில் ஒளிபரப்பாகும் "ஹெவி ரெஸ்க்யூ 401" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல முறை தோன்றிய அதே மனிதர் தான் என்று OPP உறுதிப்படுத்தியது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.