வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த மகன்; பின்னர் நேர்ந்த சம்பவம்
ஆன்லைனில் செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுதொடர்பாக டுவிட்டர் பயனாளர் ஒருவர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பாக்கெட்டுடன் கூடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் என்னுடைய சகோதரன் ஆணுறை பாக்கெட்டை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துவிட்டார்.
இதனால் அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்தபோது அதை தாய் வாங்கியாதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4ந் திகதி பகிரப்பட்ட இந்த பதிவு 7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு 5,400-க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதை பார்த்த பயனர்கள் இந்த சம்பவத்துக்கு உங்களது சகோதரர் எவ்வாறு பிரதிபலித்தார் என கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த டுவிட்டர் பயனாளி தனது போனை அணைத்துவிட்டதாக பகிர்ந்துள்ளார்.