கனடா விமான நிலையத்தில் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: மேலும் ஒருவர் கைது
கனடா விமான நிலையமொன்றில் திரைப்பட பாணியில் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Credit : PRP
அவற்றின் மீது, ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
சிறிது நேரத்தில், அவை தொடர்பான ஆவணங்களுடன் வந்த ஒருவர், அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள்.
அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்தது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.
ஆக, திரைப்படத்தில் வருவதுபோல் ஒரு கும்பல் 400 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 20 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 2024ஆம் ஆண்டு மே மாதம், Archit Grover என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், Parmpal Sidhu (54), Amit Jalota (40), Prasath Paramalingam (36) Ali Raza (37), Ammad Chaudhary (43) மற்றும் Durante King-Mclean (27) ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய Simran Preet Panesar (33) என்பவர் இந்தியாவிலிருப்பதாக கருதப்படும் நிலையில், அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, அதே கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய Arsalan Chaudhary (43) என்பவர் துபாயிலிருந்து கனடாவின் ரொரன்றோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு பீல் பொலிசார் செய்தி ஒன்றைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.
நீங்கள் எந்த நாட்டுக்கு தப்பி ஓட முயன்றாலும் சரி, மறைந்திருக்க முயன்றாலும் சரி, உங்களை விடமாட்டோம், பிடித்தே தீருவோம் என்கிறது அந்த செய்தி!