ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒருவர் பலி ; 2 ஆயிரம் பேர் தப்பியோட்டம்
ஜப்பானின் வடக்கே ஒபுனேட்டோ நகரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதோடு 2 ஆயிரம் பேர் தப்பி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காட்டுத் தீ தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காட்டுத் தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. தப்பிய சிலர் நண்பர்களின் வீட்டிலும் 1,200 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது என பேரிடர் மேலாண் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீ 1,800 ஹெக்டேர் பரப்பளவுக்கு பரவி இருக்க கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
80-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து 1,700 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராணுவ ஹெலிகாப்டர்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன.
【消防庁 岩手県大船渡市の林野火災に対する消防機関の活動状況】3月1日、緊急消防援助隊新潟県隊が、綾里地区において、延焼阻止のため消火活動を行っています。 pic.twitter.com/k6KhwJIMdJ
— 総務省消防庁 (@FDMA_JAPAN) March 1, 2025