கனடாவில் இடம்பெறற் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டில்சன்பர்க் நகருக்கு அருகே இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டில்சன்பர்க் பகுதியில் உள்ள பிளாங்க் லைன் சாலையில் இரண்டு வாகனங்கள் கடுமையாக மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கொடூர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர விசாரணை மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருவதால், கெஸ்விக் சாலை மற்றும் ஏர்போர்ட் சாலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பிளாங்க் லைன் சாலை முற்றிலுமாக மூடப்பட்டது.
உயிரிழந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.