பிரித்தானியாவில் மக்கள் தொகை அமைப்பில் பெரிய மாற்றம்
பிரித்தானியாவில் வசிக்கும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நாட்டில் வசிக்கும் வெளிநாட்டில் பிறந்த சனத்தொகையின் உண்மையான அளவைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த 'அவசர சனத்தொகைக் கணக்கெடுப்பு' நடத்தப்பட வேண்டும் என வெளிநாட்டு அறிக்கைகள் கோரியுள்ளன.

இந்த மாற்றத்திற்குக் காரணமான ஒரு விடயம், பிரித்தானிய நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்தமையாகும். பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் 19.6% பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்பது இங்குத் தெரிய வந்துள்ளது.
இது 2021ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவான 16% ஐ விட அதிகமாகும்.
2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியர் அல்லாத குடிமக்களின் நிகர வருகை 2.9 மில்லியன் ஆக இருந்தது என்று தொடர்புடைய புள்ளிவிபரங்களைத் திருத்திய பின்னர் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த மொத்த சனத்தொகை 13.6 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.