நோர்த் யோர்க்கில் மூவர் மீது துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
ஒன்றாரியோ மாகாணத்தின் றொரன்டோ நோர்த் யோர்க்கில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கால்பந்தாட்ட மற்றும் கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் காயடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்ச் அவன்யூ மற்றும் டிஃப்ரின் ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றியோ சந்தேக நபர்கள் பற்றியோ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பல துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
றொரன்டோவில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.