கனடாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள கிராண்ட் ஃபால்ஸ்-வின்ட்சர் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காண்டர் பகுதிக்கு மேற்கே உள்ள கிராண்ட் ஃபால்ஸ்-வின்ட்சர் நகரின் மெயின் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

வீட்டில் இருந்த ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிகிறது. சாட்சி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பயன்படுத்திய வாகனத்தை பொலிஸார் பின்தொடர்ந்தனர்.
அப்போது அந்த வாகனத்திற்கு அருகே ஒருவர் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்த நபரின் மரணத்தில் குற்றச் செயல்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனவும் பொலிஸார் உறுதி அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.