ஒன்றாரியோவில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் ஒமிக்ரோன் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினை உடையவர்கள் கோவிட் ஒமிக்ரோன் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் ஐந்து மில்லியன் பேருக்கு புதிய கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் சளிக்காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயங்கள் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் நோய் ஆபத்துக்களை கட்டுப்படுத்தும் எனவும் ஒன்றாரியோ மாகாண பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் கிரான் மோர் தெரிவித்துள்ளார்.
சரியான கால இடைவெளியில் கோவிட் தடுப்பூசியையும், சளிக்காய்ச்சல் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.