கனடாவில் மீண்டும் முகக்கவச பயன்பாடு அறிமுகம்?
கனடாவில் மீண்டும் முக கவசங்களை அணிந்து கொள்வது அவசியமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூரே இந்த அறிவுறுத்தலை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
உரிய நேரத்தில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுதல், பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுதல் மற்றும முக கவசங்களை அணிந்து கொள்வதன் மூலம் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிர்காலத்தில் மீண்டும் கோவிட் அலைகள் தலை தூக்க கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
மாகாணத்தில் ஏற்கனவே சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் இதனால் நிலைமைகள் மோசமடைந்தால் மீண்டும் முக கவசங்களை கட்டாயப்படுத்தும் நடைமுறை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் நான்காம் தடுப்பு ஊசி அல்லது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவில் காணப்படுவதாகவும் திருத்தி அளிக்கும் வகையில் இல்லை எனவும் அவர தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் முக கவசங்களை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட சுகாதார கட்டுப்பாடுகளை மீளவும் மாகாணத்தில் அமுல்படுத்த நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைக்கு முகக்கவச பயன்பாடு கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற போதிலும் தேவை ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார.
அண்மைய வாரங்களில் ஒனறாரியோவில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை தொடர் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.