கனடாவில் கடமை நேரத்தில் காதல் பிரச்சினையில் சிக்கிய பெண் பொலிஸ் அதிகாரி
கனடாவில் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை நேரத்தில் தனது முன்னாள் காதலரின் வீட்டுக்குள் அனுமதி இன்றி பிரவேசித்து, காதலரின் தற்போதைய பெண் தோழியை தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலீஸ் சீருடையில் ஆயுதத்துடன் சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் காதலர் வீட்டுக்குச் சென்று இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதாக குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பெண் போலீஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ போலீஸ் சேவையைச் சேர்ந்த பெண் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.