போலி கிரிப்டோ முதலீட்டுத் தளத்தில் 900,000 டொலரை இழந்த 86 வயது மூதாட்டி

Ontario Canada
By Kamal Jun 26, 2026 04:14 PM GMT
Report

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவர், போலி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் தளம் ஒன்றில் சுமார் 9 லட்சம் டொலர்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சால்ட் ஸ்டெ. மேரி பகுதியைச் சேர்ந்த ஜூடி ஸ்கீன் என்ற அந்த மூதாட்டிக்கு கடந்த 2025 கோடைக் காலத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது.

அதில் கனடாவின் முக்கிய அரசியல் தலைவரான மார்க் கார்னி பேசுவது போன்ற ஒரு வீடியோ இருந்துள்ளது.

போலி கிரிப்டோ முதலீட்டுத் தளத்தில் 900,000 டொலரை இழந்த 86 வயது மூதாட்டி | Ontario Senior Loses 900000 To Crypto

இதில் 350 கனேடிய டாலர்களை முதலீடு செய்தால், அதற்கு பேங்க் ஆஃப் கனடா உத்தரவாதம் அளிக்கும் என்று அந்த வீடியோவில் அவர் கூறுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான ‘டீப்ஃபேக்’ வீடியோ என்பதை அறியாத ஜூடி, அந்த லிங்கை க்ளிக் செய்து முதற்கட்டமாக முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த சில நாட்களிலேயே, ஒரு நபர் ஜூடியைத் தொலைபேசியில் அழைத்து, "நீங்கள் முதலீடு செய்த பணம் மும்மடங்காக உயர்ந்துவிட்டது" என்று ஆசை காட்டியுள்ளார்.

இதை நம்பிய ஜூடி, அடுத்த சில மாதங்களில் தன்னிடம் இருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார். ஒருகட்டத்தில், தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் (Condo) மீது 300,000 டொலர் அளவிற்கு அடமானக் கடன் வாங்கியும் அந்தப் போலித் தளத்தில் முதலீடு செய்துள்ளார்.

அந்த இணையதள கணக்கில் அவரது பணம் இரட்டிப்பாவது போல் காட்டியுள்ளது. ஆனால், இறுதித் தவணையை ஜூடி செலுத்தியவுடன், மோசடிக் கும்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதையும், தனது 9 லட்சம் டாலர் பணமும் பறிபோனதையும் உணர்ந்து அவர் நிலைகுலைந்தார்.

பணத்தை இழந்ததால் அன்றாட செலவுகளுக்குக் கூட வழியின்றி, வீட்டின் பராமரிப்புக் கட்டணம், காப்பீட்டுத் தொகைகள் அனைத்தும் செலுத்த முடியாமல் ஜூடி தவித்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கும் தள்ளப்பட்டார்.

இதனை அறிந்த அவரது நண்பர் பாட் ப்ரோபெர்ட் (Pat Probert), உடனடியாக அவருக்கு ஆதரவாக நின்று உதவிகளைச் செய்து வருகிறார்.

முதியவர்கள் யாராவது தனியாக இருந்தால், அவர்களது அவசரத் தொடர்பில் யாராவது ஒருவரை வங்கிக் கணக்குடன் இணைத்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று ப்ரோபெர்ட் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US