ஒன்றாரியோவில் சிறுவர் நலன்புரித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கம்
ஒன்றாரியோவில் சிறுவர் நலன்புரி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மாகாணத்தில் சிறுவர் நலன்புரித் திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 10 டொலர்களை நாளொன்றுக்கு வழங்குகின்றது.
எனினும் இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக சிறுவர் நலன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு கூடுதல் அளவில் செலவு ஏற்படுவதாக சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தெரிவித்து வருகின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் சிறுவர் நலன்புரிய திட்டங்களுக்கான கொடுப்பினவு தொகையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுவர் நலன்புரி திட்டம் தொடர்பிலான புதிய சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என கல்வி அமைச்சர் கட்ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நீண்ட காலத்திற்கு நடத்திச் செல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் புதிய முறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கான சம்பளங்களை வழங்கவும் ஏனைய செலவுகளை செய்யக்கூடிய வகையிலும் புதிய நிதி ஒதுக்கீட்டு திட்டம் அமையப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வழங்கப்படும் 10 டொலர்களுக்கு பதிலாக சுமார் 22 டொலர்கள் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.