கனடாவில் நூதன முறையில் தங்கச் சங்கிலி திருட்டு
கனடாவில் பெண் ஒருவர் நூதன முறையில் வயோதிபப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை திருடியுள்ளார்.
ஹாமில்டனின் பிளாம்பரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பகல்பொழுதில் நடந்த ‘நூதன கொள்ளை’ சம்பவம், கதவுக் கமராவில் பதிவாகியுள்ளதுடன் அந்தக் காட்சிக் காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குற்றவாளியை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். வீட்டின் கதவை திறந்த முதியவரை ஒரு பெண் சந்தித்து, அவரை அணைத்தும் முத்தமிட்டு வரவேற்று, குற்றவாளி முதியவரின் உண்மையான தங்க சங்கிலியை போலி சங்கிலியுடன் மாற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சங்கிலியொன்றை அன்புடன் முதிய பெண்ணுக்கு அணிவிப்பது போன்று அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை களவாடிச் சென்றுள்ளார்.
சுமார் 5 அடி 7 அங்குல உயரம், 40 வயது மதிக்கத் தக்க பணெ் ஒருவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்பான வரவேற்று பரிசளிப்பு போன்ற பல்வேறு வழிகளில் இவ்வாறு முதியவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.