பிரித்தானிய பிரதமரருக்கு எதிர்ப்பு; அடுத்தடுத்து பல அமைச்சர்கள் இராஜினாமா!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு (Boris Johnson) எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மேலும் பல அமைச்சர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
நிதியமைசர் ரிஷி சுனக் (Rishi Sunak) , சுகாதாரஅமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மேலும் 6 அமைச்சர்கள், அமைச்சு உதவியாளர்கள் இன்று இராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி கல்வி அமைச்சர்கள் வில் குய்ன்ஸ் (Will Quince), ரொபின் வோல்கர் (Robin Volker), நீதியமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் (Victoria Atkins ), திறைசேரி அமைச்சர் ஜோன் கிளென் (John Glen) , அமைச்சு உதவியாளர்கள் லோரா ட்ரொட் (Laura Trott), பெலிசிட்டி புக்கான் (Felicity Buchan) ஆகியோர் இன்று ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.