ஆஸ்கர் விருது 2025: சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தெரிவு
2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது லோஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
சிறந்த நடிகருக்கான விருதை தி ப்ரூடலிஸ்ட் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகக் அட்ரியன் பிராடி வென்றுள்ளார்.
ஆஸ்கார் விருது
இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை ‘A Real Pain’ திரைப்படத்திற்காகக் கீரன் கல்கின் வென்றுள்ளதுடன், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ‘EMILIA PEREZ’ திரைப்படத்திற்காக சோ சல்தானா வென்றுள்ளார்.
சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கார் விருதை ‘THE SUBSTANCE’ திரைப்படம் வென்றுள்ளதுடன், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது `Wicked’ திரைப்படத்திற்காகப் பால் டேஸ்வெலுக்கு வழங்கப்பட்டது.