கனடாவில் தீ விபத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Kamal
Report this article
கனடாவின் நோபில்டனில் (Nobleton) தீ வைத்து எரிக்கப்பட்டது எனக் கூறப்படும் உணவகத்திற்குள் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 16 காலை 3 மணிக்கு முன்பு ஹைவே 27 மற்றும் கிங் ரோடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யோர்க் பிராந்திய பொலிஸாருக்கு (YRP) தீ பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளன.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தியபோது, உணவகத்திற்குள் ஒரு நபரின் சடலம் காணப்பட்டது. இந்த தீ விபத்து சந்தேகத்திற்கிடமானது என்பதால், ஒன்டாரியோ தீ பாதுகாப்பாளர் அலுவலகம் (Ontario Fire Marshal) விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக YRP தெரிவித்துள்ளது.
தற்போது, உயிரிழந்தவர் மிசிசாகாவைச் சேர்ந்த 22 வயது பசாம் மஹைடாட் (Bassam Mhaidat) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து தொடர்பில் மிசிசாகாவைச் சேர்ந்த 22 வயது சயீத் அல்ஷூபாக்கே (Saeed Alshoubake) மீது இரண்டாம் கொலை (மற்றும் தீ வைத்தல் (Arson) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவில்லை. இது குறிவைத்த தாக்குதலாக இருக்கலாம் என விசாரணையாளர் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்தவர்கள், கண்காணிப்பு கேமராக்கள் அல்லது டாஷ்கேம் (Dashcam) காணொளி காட்சிகளை பரிசோதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.