ஒட்டாவாவில் படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையர்கள் யார்?
கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் சம்பவத்தில் ஆறு இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களை கனடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியின் டீநசசபையn னுசiஎந வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அவைனரும் இலங்கைப் பிரஜைகள் எனவும் அண்மையில் கனடா வந்தவர்கள் எனவும் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
35 வயதான தர்ஷனி திலன்திகா ஏக்கநாயக்க, 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஸ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரினியான விக்ரமசிங்க, இரண்டு மாதங்களான கெலி விக்ரமசிங்க ஆகிய தாயும் பிள்ளைகளும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த குடும்பத்துடன் அதிகம் அறிமுகமில்லாத 40 வயதான காமினி அமரக்கோன் என்பவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இவர் அண்மையில் கனடா வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான தனுஷ்க விக்ரமசிங்க படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயிபராத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் 19 வயதான பெப்ரியோ டி சொய்சா என்ற இலங்கைப் பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர். சொய்சா மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி இந்த ஆறு பேரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன நோக்கத்திற்காக இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.