ஒட்டாவாவில் ட்ரக் வாகனப் பேரணியில் இருவர் பொலிஸாரால் அதிரடி கைது!
கனடாவில் ட்ரக் வாகனப் பேரணி போராட்டத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டாவாவில் நான்காவது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஒட்டாவாவைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைதானது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.இதேவேளை ஒட்டாவாவைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவரை ஆயுதம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தப் பேரணி போராட்டங்களுடன் தொடர்புடைய 13 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.