எமது ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது! அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க மிரட்டல்
அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என சீனா கூறி இருக்கிறது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
அதில் அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி (Nancy Pelosi) , சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது.
இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று சிங்கப்பூர் வருகை தரும் அவர் (Nancy Pelosi), தொடர்ந்து ஆசியாவில் உள்ள நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் பைடன் (Joe Biden) உடன் காணொலி வாயிலான ஐந்தாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீனா அதிபர் (Xi Jinping),
தைவான் தொடர்பான விவகாரத்தில் சீனாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாக சீன அரசாங்கம் பிரதிபலிக்கிறது. இவ்விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று கடுமையாக எச்சரித்ததுடன் சீனாவின் கருத்தை அமெரிக்க மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
சீனாவின் அண்டை நாடான தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதி நான்சி (Nancy Pelosi) விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி சீனாவை ஆத்திரமூட்டியுள்ளது.
தைவான் சீனாவின் ஒரு பகுதியாக சீனா கூறி வரும் நிலையில் ராணுவம் தொடர்பான அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க பிரதிநிதியுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு அருகாமையில் உள்ள பின்தான் தீவுகளில் சீன ராணுவம், ராணுவ பயிற்சி ஒத்திகையை நடத்தி வருகிறது.